ஒரு வரிச் செய்திகள்

 


        👉சோனியா காந்தி தலைமையில் அகிலேஷ் யாதவ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


  ☀☀ 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கிடையாது; 


6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை


     🙏அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் முதல்முறையாக தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரின் முயற்சியால் இந்த உரிமை கிடைத்துள்ளது.


    ✋💬உலக அளவில் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7 லட்சம் கோடி) சொத்து வைத்திருப்போர் பட்டியலில் புதுவரவாக இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபராக கெளதம் அதானி இணைந்திருக்கிறார்


    👉திண்டுக்கல்: பாலியல் வழக்கில்  தனியார் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் ஜாமீன் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்

8.4.22க்குள் சரணடைய உத்தரவு.


    👉திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் செல்போன் திருடப்பட்டுள்ளது.

HandBagல் வைத்திருந்த ஐபோன் திருடப்பட்டுள்ளது. டெல்லி அறிவாலய திறப்பு விழாவில் கலந்துகொண்ட போது சம்பவம் நடந்துள்ளது


    👉சொத்து வரி உயர்வை மார்ச் 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளவில்லை என்றால் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் ரூ.15,000 கோடி நிதியினை வழங்க மாட்டோம் என நிர்பந்தம் கொடுப்பதாக கே என் நேரு தகவல்


மத்திய அரசின் அழுத்தத்தினால் தான் வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்


    👉கோவை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில், ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுவிக்க மறுத்தது சரியே - தமிழக அரசின் உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்


    👉மத்திய பல்கலை. பொது நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது


* 2022-23 கல்வியாண்டில் மத்திய பல்கலை. மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் UG, PG சேர பொது நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது


    👉அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தது அமலாக்கத்துறை


    👉சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென மயங்கி விழுந்தார்!

மயங்கி விழுந்த சீமானை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

சீமான் நலமாக உள்ளார் என கட்சியினர் தகவல். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.


நிருபர் மணிவண்ணன்