கிராமசபை கூட்டத்தில் முதல்வர்

 


        பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும்(24-04-22) அன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது 


 செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.


காஞ்சிபுரம்- செங்காடு ஊராட்சியில்,  கிராமசபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் 

.


கிராமசபை கூட்டத்தில் பெண்களிடம் ஒவ்வொரு துறை சம்பந்தமாகவும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  மகளிர் குழு சம்பந்தமாகவும், தூய்மைப் பணியாளர்கள் புகார் மனுக்களையும் தங்கள் ஊரில் ரேஷன் கடை இல்லாத குறையும் மேலும் பல புகார்கள் மனுவாக அதிகாரிகளிடம் தரப்பட்டு விரைவில்   சம்பந்தப்பட்ட துறையின்  மூலம் தீர்க்கப்படும் என முதல்வர் அறிவிப்பு 

நலத்திட்டங்கள் கிராம அளவில் எல்லாத் தரப்பினரையும் சென்றடைவதும்; ஒவ்வொருவரின் வாழ்வும் வளம்பெறுவதும்தான் முக்கியம்.



செங்காடு ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் முதல்வர்.

ஊராட்சி மன்றத் தலைவரோடு அமர்ந்து, அக்கிராமத்தின் தேவைகளைக் கேட்டறிந்தார் .

ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களோடு மக்களாகச் செயலாற்றிட வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார்.


செய்தியாளர் மணிவண்ணன்