அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு*

 


 

         அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு  சட்டம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு*


மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு*


மருத்துவ படிப்பில் சேர்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த அதிமுக ஆட்சி கொண்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் 7.5 %இடஒதுக்கீடு வழங்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, பரத் சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.


ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தல்.


செய்தியாளர் பாலாஜி