அபார வெற்றி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

 


    மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

 

 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி*


நியூசிலாந்தின் மவுன்ட் மங்கனாயில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.


பாகிஸ்தானிடம்  இதுவரை தோற்றதில்லை என்ற பெருமையை தக்கவைத்தது இந்திய மகளிர் அணி 

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுடன் மோதிய 11 ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி


  நியூசிலாந்தில் மார்ச் 4ஆம் தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்  மோதினர்.


இந்தத் தொடரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து தவிர ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.


நிருபர் மணிவண்ணன்