ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கடகம், சிம்ம ராசி

 

     

    ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 - பாகம் 04


🌹🌹🌹🍫🍫

ராகு கேது பெயர்ச்சி 2022-2023...!!


கடகம் :


வளமான கற்பனையும், எழுச்சியும், சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லும் கடக ராசி அன்பர்களே...!!


ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கடக ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.


பலன்கள் :


எதிலும் எளிமையான வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சில தவறுகள் மூலம் புதிய பரிணாமத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மூலிகை தொடர்பான தொழில்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கதை, கட்டுரை போன்ற செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும்.


பொருளாதாரம் :


தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தேவையற்ற ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும்.


உடல் மற்றும் ஆரோக்கியம் :


குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அடிக்கடி பயணம் மேற்கொள்வதை குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.


பெண்களுக்கு :


திருமணமான தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் சாதகமான முடிவு உண்டாகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் உதவி கிடைக்கும்.


வியாபாரிகளுக்கு :


செய்யும் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் மற்றும் லாபம் உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.


விவசாயிகளுக்கு :


பயிர் விளைச்சலில் ஏற்ற, இறக்கமான சூழல் காணப்படும். பாசன வசதிகளின் தன்மைகளை அறிந்து அதற்கேற்ப பயிர் விளைச்சலை மேற்கொள்ளவும்.


அரசியல்வாதிகளுக்கு :


சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி வாகையை சூடுவீர்கள்.


மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மையான சூழல் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.


நன்மைகள் :


நடக்க இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். மேலும் இலக்குகள் பிறக்கும்.


கவனம் :


பயணம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.


வழிபாடு :


வெள்ளிக்கிழமைதோறும் வராஹி அம்மனை வழிபாடு செய்துவர சிந்தனை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும்.


மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


🌹🌹🌹🌹🌹


ராகு கேது பெயர்ச்சி 2022-2023...!!


சிம்மம் :


வேகமும், நிர்வாகத் திறமையும் கொண்டிருக்கக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே...!!ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் சிம்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சிம்ம ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.பலன்கள் :


செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுகமான தடைகள் குறையும். பொருள் வரவும், மதிப்புமும் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசும் பிரபலமானவர்கள் மற்றும் அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.


பொருளாதாரம் :


பொருளாதாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் படிப்படியாக மறையும். எதிர்பார்க்காத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 


உடல் மற்றும் ஆரோக்கியம் :


தாயாரின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும்.


பெண்களுக்கு :


கர்ப்பிணி பெண்கள் உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். மனதை உறுத்தி கொண்டிருந்த நீண்ட நாள் கவலைகள் குறையும். 


மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த சோம்பல் குறைந்து சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். உயர்கல்வி சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோக பணிகளில் இருந்துவந்த சோர்வும், வீண் பழியும் படிப்படியாக குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் திறமைகள் வெளிப்பட்டு அங்கீகாரங்களை கிடைக்கப் பெறுவீர்கள்.


வியாபாரிகளுக்கு :


வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகளை புதிய தொழில்நுட்பம் சார்ந்த நுணுக்கமான விஷயங்களை கொண்டு எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசு தொடர்பான திட்டங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். பதவி நிமிர்த்தமான விஷயங்களில் புதிய அனுபவங்களை கிடைக்கப் பெறுவீர்கள்.


கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். துறைசார்ந்த பிரபலங்களின் அறிமுகங்கள் ஏற்படும்.


நன்மைகள் :


நடக்க இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனதளவில் மாற்றமான சிந்தனைகள் மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.


கவனம் :


உடன்பிறந்தவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மேலும் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.


வழிபாடு :


வெள்ளிக்கிழமைதோறும் நாக தேவதைகளை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.


மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!!


 அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


திருமதி மோகனா செல்வராஜ்