ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (52) தாய்லாந்தில் தங்கியிருந்த வார்னே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சுழற்பந்துவீச்சு ஜாம்பவானாக திகழ்ந்த ஷேன் வார்ன்:
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் 52.
கடந்த 1992ல் இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் அறிமுகம் ஆனார்.
டெஸ்ட் அரங்கில் முதன் முதலில் 700 விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமை பெற்ற வார்ன், 145 டெஸ்டில் 708 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
20ம் நுாற்றாண்டின் சிறந்த 'டாப்-5' வீரர்களில் ஒருவராக இருந்தார்.
2004ல் இலங்கை தொடரில் 3 டெஸ்டில் 24 விக்கெட் வீழ்த்தினார்.
ஓய்வுக்குப் பின் 2008ல் இந்தியாவில் துவங்கிய ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணி கேப்டனாக இருந்து முதல் கோப்பை வென்று தந்தார்.
தற்போது விடுமுறைக்காக தாய்லாந்து சென்ற இவர், மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
வார்ன் மரணத்தை உறுதி செய்த அவரது நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,' தாய்லாந்தின் கோ சாமுய் நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார் வார்ன். துாக்கத்தில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். மருத்துவ நிபுணர்கள் முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை,' என தெரிவித்துள்ளது.
திருமதி மோகனா