ஒரு வரி செய்திகள்

 


        👉இனி மாஸ்க் போட்டாலும் முகம் தெரியும்.. இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள புதுவித டிரான்ஸ்பரண்ட் மாஸ்க்


    👉மின்வாரிய டெண்டர் குறித்த குற்றச்சாட்டு 24 மணி நேரத்தில் ஆதாரத்தை தராவிட்டால் நடவடிக்கை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை


     👉காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக  தேர்த்திருவிழா நடைபெறுவதை காரைக்கால் மாவட்டத்திற்கு  அரசு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா.


     👉கருங்கடலில் இருந்த தங்களது நாட்டைச் சேர்ந்த 3 கப்பல்கள் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளதாக பணாமா நாட்டு அரசு தகவல்; அதில் ஒரு கப்பல் மூழ்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


    👉மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி மதிப்பில் புதுப்பொலிவு பெறுகிறது; திட்ட மதிப்பீட்டு பணியை தொடங்கியது பொதுப்பணித்துறை


    👉பங்குனி உத்திரம் என்பது இந்துக்களின் மிகப்பெரும் ஆன்மீக திருவிழா;


பெரும்பான்மை மக்களின் வழிபாட்டுக்குரிய திருவிழாவான பங்குனி உத்திரத்தை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்”- இந்து முன்னணி


    👈👉இணைந்து பணியாற்றுவோம்" - பஞ்சாப் புதிய முதல்வருக்கு பிரதமர் மோடி அழைப்பு


    👉ஒவ்வொரு திமுக தொண்டரும்  ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை பார்க்க வேண்டும்; இது படம் அல்ல பாடம்

 பாஜக மாநில துணைத் தலைவர். வி.பி.துரைசாமி.


    👉உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவிற்கு உத்தரவு


    👉போயஸ் இல்லத்திற்காக அரசு செலுத்திய ₨68 கோடி வைப்பு தொகை வட்டியுடன் மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அளிப்பு


போயஸ் இல்லத்தை அரசுடமையாக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 2020ல் ரூ.68 கோடியை டெபாசிட் செய்தது


    👈சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50%  இடஒதுக்கீடு செய்து அதிமுக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற  தீர்ப்பினை உளமாற வரவேற்கிறேன்.-  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 % ஒதுக்கீடு.... சமூக நீதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக முதல்வர் மு.க. ஸ்டாலின்  அன்புமணி வரவேற்பு*


    👉தமிழ்நாட்டில் உள்ள பரனூர், சென்னசமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் - அமைச்சர் எ.வ.வேலு


    👉எங்கள் ஆதரவு இல்லாமல் பாஜக குடியரசுத் தலைவர் தேர்தலில் பயணிக்கமுடியாது -  மம்தா பானர்ஜி