தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா:

 


       தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா:

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றினார்.


திருவள்ளுவர் விருது மறைந்த மீனாட்சி சுந்தரத்திற்கு வழங்கப்படுகிறது. 

பெருந்தலைவர் காமராசர் விருது குமரி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்திற்கு வழங்கப்படுகிறது.


திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ் ஆட்சியாக, தமிழன் ஆட்சியாக நாங்கள் நடத்தி கொண்டு இருக்கிறோம். நாங்கள் என்று கூறுவது உங்கள் அனைவரையும் சேர்த்துதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


மாபெரும் புத்தகப் பூங்கா... தமிழகத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு    ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்க வலியுறுத்தினார்.


அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். - தமிழ்நாடு அரசு


நிருபர் பாஸ்கர்