மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற மாநாடு நிறைவு

 


    மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற 3 நாள் மாநாடு நிறைவு


மாநாட்டில் பங்கேற்ற அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய உணவு சாப்பிடுகிறார்


சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என பிரிவினை செய்வதும் தவறானது; ரவுடிகளை இடம், சாதி, மதம் என அடையாளப்படுத்தக் கூடாது. குடிசைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அமைச்சர் சொன்னார், இது போன்ற அடையாளப்படுத்தல்கள் கூடாது - முதலமைச்சர்  பேச்சு

ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்;

குற்றங்களே இல்லாத சமூகத்தை உருவாக்குவதோடு, திட்டமிட்டு உருவாக்கப்படும்  மத மோதல்களை தடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.


காவல்துறையின் சோஷியல் மீடியா செண்டருக்கு புதிய அலுவலகம் தேவை என்ற திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்.

காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.


குழந்தை திருமணங்களை தடுக்க, சமூக நலத்துறையுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர்கள் செயல்படவேண்டும்..

தஞ்சை காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா கோரிக்கை குறித்து முதல்வர் உத்தரவு


அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் ஆகியோருடன் மூன்றாவது நாள் மாநாடு முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது.இன்று நடைபெறும் மாநாட்டில் வனத்துறை அதிகாரிகளும் ifs பங்கேற்றனர்.மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிற்கு மஞ்சள் பையுடன் வந்த அமைச்சர்கள்.    கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்நோக்கு மருத்துவமனைக்கு, அடுத்த வாரத்தில் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


நமது நிருபர்