ஒரு வரிச் செய்திகள்

 


     👉120 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து ஆய்வு மேற்கொண்ட திருச்சி எஸ்.பி சுஜித்குமார்.


     👉நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் சந்தித்தது அவரது தனிப்பட்ட விவகாரம், முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்

- புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் 


    ✌1000 -வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி

 

      👉முதல்வர் வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றி வருகிறார்

தேர்தலில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, வெற்றி பெற்ற பின்பு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை

சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து 

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்.


    👉அரியலூர் - அரசு சிமெண்ட் ஆலைக்கு செல்லும் 4 டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு 


 டிப்பர் லாரியில் அளவுக்கு அதிமாக சுண்ணாம்புக்கல்லை ஏற்றி செல்வதால் ஆத்திரமடைந்த  கடுகூர் கிராம மக்கள் லாரிகளை  சிறை பிடித்தனர்


    👉நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

பரப்புரை கோவையில் காணொளி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த கட்சி செய்யாததை திமுக செய்திருக்கிறது - கோவையில் திமுக நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் பேச்சு


நடு வீட்டில் திருடன் மாட்டிக்கொண்டது போல அதிமுகவினர் மாட்டிக்கொண்டார்கள்.நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் பேச்சு.


    👉ஆளுநர், மத்திய அரசின் பேச்சை கேட்டு செயல்படுகிறர்; ஆளுநர் ஒரு ஏஜெண்ட் போல் செயல்படக் கூடாது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்


கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்? - கமல்


    👉கடந்த 4 ஆண்டுகளுக்கான புதிய வழித்தடத்திட்ட நிதி ஒதுக்கீடு;


தெற்கு இரயில்வேக்கு 308 கோடி

வடக்கு இரயில்வேக்கு 31,008 கோடி


101 மடங்கு அதிகம்.


இந்த கொடிய உண்மையை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது-சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்    👉இந்தியாவின் நைட்டிங்கேலானா லதா மங்கேஷ்கர் மறைவுச் செய்தி ஆழ்ந்த வலியை ஏற்படுத்துகிறது; 80 வருட இசைப்பயணம் மற்றும் பல மொழிகளில் மெல்லிய குரலில் பாடும் விதத்தாலும் ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்தை தொட்டிருக்கிறார். -முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்


    👉லதா மங்கேஷ்கர் மறைவு வேதனை அளிக்கிறது: இளையராஜா


    👉பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு வி.கே.சசிகலா இரங்கல்


லதா மங்கேஷ்கர் பாடிய 'ஆஜா சனம் மதுர சாந்தினி மெஹம்' என்ற பாடலை ஜெயலலிதா அடிக்கடி பாடிக்கொண்டே இருப்பார் - வி.கே.சசிகலா


    👉நடிகர் சிவாஜி கணேசன்  மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோர் உடன்பிறந்த அண்ணன், தங்கை போன்று - நடிகர் பிரபு பேட்டி


நிருபர் பாஸ்கர்