இருவரி செய்தித்துளிகள்

 


    புனித் ராஜ்குமாரின் சகோதரர்

முதலமைச்சருடன் சந்திப்பு.

            👀👀❤👀👀❤👀👀

    👃👉 திமுக சார்பில் உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை காணொளி காட்சி மூலம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்பு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள மாநகராட்சி, 3 நகராட்சி, 23 பேருராட்சியில் உள்ள   86 இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

            👀👀❤👀👀❤👀👀

       👉கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், அவர் வருமானத்தை விட 171 சதவிகிதம் கூடுதலாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

            👀👀❤👀👀❤👀👀

👉உலகளவில் இதுவரை 41.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு


கொரோனாவில் இருந்து 33.06 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.27 லட்சம் பேர் உயிரிழப்பு

            👀👀❤👀👀❤👀👀

    👉ரிசர்வ் வங்கி எச்சரிக்கையால் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்படுமா என்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

            👀👀❤👀👀❤👀👀

    👉கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடர இயக்குநர் சுசி கணேசனுக்கு அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

            👀👀❤👀👀❤👀👀

    👉திமுக அரசு இதுவரை ஒரு தப்பான அடிகூட எடுத்துவைக்கவில்லை; தடம் புரலாமல் செயல்பட்டு வருகிறது.


- முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

            👀👀❤👀👀❤👀👀

    👉திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளும் கலைப்பு 

புதிய செயற்குழு அமைத்தார் மமதா பானர்ஜி.கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியை அடுத்து தடாலடி.

            👀👀❤👀👀❤👀👀

    👉பாஜகவுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம்: எல்.முருகன்

            👀👀❤👀👀❤👀👀

    👦தனுஷ்கோடி -  தலைமன்னார் இடையே  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரையும், 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.

            👀👀❤👀👀❤👀👀

    👉நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான் 


*நாட்டின் பாதுகாப்பில் பாஜக எந்த விதத்திலும் சமரசம் செய்யாது - உத்தரகாண்டில் யோகி ஆதித்யநாத் பிரசாரம்

            👀👀❤👀👀❤👀👀

    👉இந்தியாவுக்கு பெரும் இழப்பு".. குடியரசுத் தலைவர் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை - ராகுல் பஜாஜ் இறப்புக்கு தலைவர்கள் இரங்கல்.

            👀👀❤👀👀❤👀👀

 👉வண்டலூர் பூங்காவில் திருடு போன அணில் குரங்குகள் மீட்பு - 4 பேர் கைது

            👀👀❤👀👀❤👀👀

    👉முஸ்லீம் பெண்களை 4 சுவர்களுக்குள் தள்ள முயலும் சதி திட்டமாகவே ஹிஜாப் சர்ச்சையை பார்க்கிறேன்


ஹிஜாப் முக்கியமானதாக நம்பினால், முஸ்லீம் சிறுமிகள் மீண்டும் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்படலாம் - கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

            👀👀❤👀👀❤👀👀

    👉தீவரவாதமும், வன்முறையும் தலை தூக்க வேண்டாம் என்றுதான் சட்டசபை முடக்கப்பட்டதாக மேற்கு வங்க ஆளுநர் சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது; மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவை முடக்கம் இல்லை ஒத்திவைக்கப்பட்டுள்ளது”

- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

            👀👀❤👀👀❤👀👀

    👉கிருஷ்ணகிரி அருகே காலணி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கடையின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு .படுகாயம் அடைந்த நபர் கிருஷ்ணகிரி அரசு  மருத்துவமனையில் அனுமதி


சிசிடிவி காட்சிகளை வைத்து லோகேஷ் என்பவருக்கு போலீசார் வலைவீச்சு

            👀👀❤👀👀❤👀👀

    👊👉குஜராத் - கடத்தப்பட்ட ரூ. 2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

            👀👀❤👀👀❤👀👀

    ✌பிஎஸ்எல்வி சி - 52 ராக்கெட் கவுன்ட் டவுன் தொடக்கம்

            👀👀❤👀👀❤👀👀

நிருபர் பாலாஜி