ஒரு வரிச் செய்திகள்

 


     🙏சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக்கொண்டார்.


அவருக்கு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் மலர்கொத்து வழங்கி தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.

            👀👀👅👀👀👅👀👀

     👌நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளின் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு தேவையான 80 வகையான பொருட்கள் மற்றும் 9 வகையான கொரோனா தொற்று தடுப்பு பொருட்களும் தயார்”

-சென்னை மாநகராட்சி

            👀👀👅👀👀👅👀👀

    😪திமுக வேட்பாளர் திடீர் மரணம் - வத்திராயிருப்பு 2-வது வார்டு தேர்தல் ரத்து

            👀👀👅👀👀👅👀👀

    👉காங்கிரசை அழிக்க, உடன்பிறப்புகள் போதும் - யோகி

            👀👀👅👀👀👅👀👀

    👉திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. அதிமுக பொறுப்பில் இருந்தபோது சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.


தில்லு, திராணி இருந்தால் நேரடியாக போட்டி போடுங்கள் - 


-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

            👀👀👅👀👀👅👀👀

     💢தமிழ்நாடு முழுவதும் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகளின் குத்தகை மற்றும் வாடகை வசூல் தீவிரமாக நடைபெற்று வருகிறது; இதுவரை ரூ.88 கோடி வசூல்


- இந்து சமய அறநிலையத்துறை

            👀👀👅👀👀👅👀👀

     😪மெக்சிகோ: மர்மமான முறையில் கூட்டம் கூட்டமாக கீழே விழுந்து இறந்துபோன பறவைகள் நச்சுக்காற்று சுவாசித்தால் இறந்ததாக தகவல்

            👀👀👅👀👀👅👀👀

    👉போலி பத்திர பதிவு ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு இழுத்தடிப்பு வருவதால் போலிப்பதிவு தொடர்பான புகார் மனுக்கள் மீது விசாரணையை மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.

            👀👀👅👀👀👅👀👀

    👉கிராம கோயில் பூசாரிகள் நல வாரியம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் 60 வயதை கடந்த  பூசாரிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கும் வகையில் ஒரு கழகத்துக்கு 50 பேரிடமிருந்து விண்ணப்பத்தை கண்டிப்பாக பெறவேண்டுமென்று ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

            👀👀👅👀👀👅👀👀


      ✌மத்தியில் பா.ஜ.க கட்சி ஆட்சியில் உள்ளது; மாநிலத்தில் திமுக உள்ளது;

உள்ளாட்சி திட்டங்களுக்கு  மத்திய அரசிடம் இருந்துதான் பணம் வருகிறது;

- பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை


நிருபர் கார்த்திக்