2022 - 23க்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

      2022 - 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தபின் ஆற்றிய உரையில், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருக்கும்.


ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. உலகிலுள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.  அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


👉ஆத்ம நிபார் பாரத் திட்டத்திற்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரி செய்து வருகிறோம். சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டில் நாம் இருந்தாலும், நமது இலக்கு இந்தியா 100 என்பதுதான்.


👉நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்து கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்காக ரூ.20,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.


👉நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும்; அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


👉பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்.. நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 


 👉 அடுத்த ஐந்தாண்டுககளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு.- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


👉வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 3ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் 


👉இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு


👉கோதாவரி-பெண்ணையாறு-காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது : நிதியமைச்சர்


👉கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு PM E-Vidhya திட்டம் வழியாக 200டி.வி சேனல்கள் மூலம் மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படும்.- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


👉1-12 ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் உறுதி


👉ஒரு தொகுப்பு ஒரு சேனல்....


கல்வி பாதிப்பை சீர் செய்ய "ஒரு வகுப்பு ஒரு சேனல் " என்ற வகையில் 100 கல்வி சேனல்கள் தொடங்கப்படும்


👉2,000 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்பாடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


👉ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


👉நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.


👉மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தொலைபேசி வழியாக  ஆலோசனை வழங்கும்  மன ஆரோக்கிய திட்டத்திற்கு அனுமதி -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


👃👉நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் அஞ்சலகங்கள் CBS (core banking solution) கீழ் கொண்டுவரப்ட்டுள்ளது.- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


👃இ.பாஸ்போர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதில் உள்ள சிப். வைக்கப்பட்டிருக்கும். இது சர்வதேச பயணங்களை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்படும் பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


👃ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை வெற்றிகரமாக முடிந்தது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி -யில் பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும் -நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தகவல்


👃விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் விவசாயத் துறையில் டிரோன்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும்


👃இதன் மூலம் விவசாய நிலங்களை அளவிடுவது உரங்களை தெறிப்பது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது: மத்திய பட்ஜெட்


👃5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


👃பிட்காயின் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் கரன்சிக்கு மத்திய அரசு அனுமதி


👃2023ன் ஆண்டு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் மற்றும் விதிமுறைகளின் கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்


👃நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9%  அளவில் இருக்கும்: நிர்மலா சீத்தாராமன்


👃மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


👉ஜி எஸ் டி வரி வசூலில் சாதனை


ஜிஎஸ்டி அமல் படுத்தப் பட்டதில் இருந்து இந்த ஜனவரி மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி தான் மிக அதிக தொகை ஆகும்


சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நடப்பு ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீத்தாராமன் பெருமிதம்


👃யூடியூப் தளத்தில் 1 கோடி பயனர்களை பெற்ற பிரதமர் மோடி: உலக தலைவர்களில் நம்பர் 1


👃இந்த ஆண்டிற்கான தனிநபர் வருமான வரி விகிதங்கள் எந்த மாற்றமும் இல்லை.கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நடுதரவர்கம் மிகவும் எதிர்பார்த்தது


'தடுப்பூசி திட்டத்தால் கொரோனா குறைந்துள்ளது' -பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்

            👀👀❤👀👀❤👀👀

👉பட்ஜெட் பற்றி தலைவர்கள் கருத்து

மத்திய பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை - மோடி அரசின் 'ஜீரோ' பட்ஜெட். .ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றமே - ராகுல்காந்தி


    👉மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட்

எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - கமல்ஹாசன்


நிருபர் பாஸ்கர்