இரு வரிச் செய்திகள்


       தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது பொங்கல் நல்வாழ்த்துகள்; கவலைகளுக்கு விடைகொடுத்து உற்சாகம், நேர்மறை நிறைந்த தைத்திருநாளை வரவேற்போம்.

பொங்கலின் உண்மையான உணர்வை குடும்பத்தினர், நண்பர்கள், அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுவோம்.

 - ஆளுநர் ஆர்.என்.ரவி

            👀👀❤👀👀❤👀👀





         புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

            👀👀❤👀👀❤👀👀

காஞ்சிபுரம்: 3 காவல்துறை ஆய்வாளர்கள் தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் 

பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகளால் 
டிஜிபி சைலேந்திரபாபு பணியிட மாற்றம் 
செய்து உத்தரவு

            👀👀❤👀👀❤👀👀

நெல்லை; அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் ஜன.14 மற்றும் ஜன.15 ஆகிய 2 நாட்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை - வனத்துறை 

* கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை அறிவிப்பு

            👀👀❤👀👀❤👀👀
 
பொள்ளாச்சியில் மாட்டு வண்டி ஒட்டியவரிடம் லஞ்சம்; சிறப்பு உதவி ஆய்வாளர் மதிவாணன் உள்ளிட்ட இருவரை பணியிடை  நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவு

            👀👀❤👀👀❤👀👀
 
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களின் ஓய்வூதியம் ₨1,000-ல் இருந்து ₨3,000 ஆக உயர்வு

            👀👀❤👀👀❤👀👀

வழிபாட்டு தலங்களில் நாளை முதல் வரும் 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தடை 

வரும் 18ஆம் தேதி பழனி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா

தடை காரணமாக பழனி தண்டாயுதபாணி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

கிரிவலப்பாதையில்  கூட்டம் கூட்டமாக 
வலம் வரும் பக்தர்கள்

            👀👀❤👀👀❤👀👀

 முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ₨200-ல் இருந்து ₨500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

            👀👀❤👀👀❤👀👀

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்யவேண்டும் - மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

            👀👀❤👀👀❤👀👀

இலங்கை கடற்படையினரால் கைதான தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கண்டனம் 

* மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்

            👀👀❤👀👀❤👀👀

 காவல், தீயணைப்பு துறையில் பணியாற்றும் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

            👀👀❤👀👀❤👀👀

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து 

* பொங்கல் திருநாளில் வெற்றிகள் உங்கள் வசமாக வாழ்த்துகள் - ஓபிஎஸ்

            👀👀❤👀👀❤👀👀

 கேரளாவில் நாளை (ஜன.14) பொங்கல் விடுமுறை அறிவிப்பு

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.

கேரளாவில் பொங்கல் தினத்தை முன்னிட்டு 6 மாவட்டங்களில் நாளை விடுமுறை என அறிவிப்பு

இடுக்கி, பந்தனம்திட்டா, திருவனந்தபுரம், கொல்லம், வயநாடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை - கேரள அரசு


            👀👀❤👀👀❤👀👀

 தெருநாய்களை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ₨10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

பெரம்பலூரில் விஜயா என்ற பெண் உயிரிழந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.



                👀👀❤👀👀❤👀👀

திருமதி மோகனா செல்வராஜ் 

🙏தடுப்பு ஊசி முக கவசம் அவசியம்🙏