ஒரு வரிச் செய்திகள்

 


     🙏பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரனோ வைரஸ் தொற்று பரவல் காரணமாகவும் பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் எளிய முறையில் நடைபெற்றது.

            👀👀❤👀❤👀👀

    👉நீட் தேர்வுக்காக சட்டப் போராட்டம் நடத்தினாலும், ஹைடெக் ஆய்வகம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது 

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

            👀👀❤👀❤👀👀

    👉பொங்கல் விடுமுறைகளுக்குப் பிறகு எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

            👀👀❤👀❤👀👀

    👉சென்னை: ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் கொண்டாட்டம்


எம்.ஜி.ஆரின் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மலர் தூவி மரியாதை

            👀👀❤👀❤👀👀

 


   😪ஐக்கிய அரபு அமீரகம் : அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் ட்ரோன் தாக்குதலில் 3 எரிபொருள் டேங்கர்கள் வெடித்து சேதம்


ட்ரோன் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சிப் படை அமைப்பு பொறுப்பேற்பு


ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு

            👀👀❤👀❤👀👀

    😢பழம்பெரும் மலையாள இசைக்கலைஞர் ஆலப்பி ரங்கநாத் கொரோனாவால் உயிரிழப்பு

            👀👀❤👀❤👀👀

  


  👮வேடசந்தூர் பண்ணைபட்டியில் அனுமதியின்றி சேவல்சண்டை நடத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு.


            👀👀❤👀❤👀👀

    👉ஒத்திவைக்கப்பட்டது பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல்


பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்பொழுது பிப்ரவரி 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்திருந்தது


    👉சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பதவிவகித்த புவியரசன் இடமாற்றம்


            👀👀❤👀❤👀👀