நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவதாக இணையதளத்தில் அறிவிப்பு

 


        *நானும் ஐஸ்வர்யாவும் பிரிகிறோம்: எங்கள் முடிவுக்கு மதிப்புகொடுங்கள் - தனுஷ்*


தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். அவருடயை மூத்த மகள் ஐஸ்வர்யா. அவருக்கு தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுக்கு 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள செலிபிரட்டி தம்பதிகளில் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் முக்கிய இடமுண்டு. இந்தநிலையில், திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.


இதுகுறித்த தனுஷுன் ட்விட்டர் பதிவில், ‘18 வருடங்களாக நண்பர்களாக, இணையர்களாக, பெற்றோர்களாக, ஒருவொருக்கொருவர் நலம் விரும்பிகளாக நாங்கள் இணைந்திருந்தோம். இந்தப் பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரித்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்பதாக இருந்தது. இன்று நாங்கள் எங்களுடைய பாதையில் பிரிந்து செல்லவேண்டிய இடத்தில் நிற்கிறோம்.


ஐஸ்வர்யாவும், நானும் ஒரு தம்பதியாக பிரிந்து செல்ல முடிவுஎடுத்துள்ளோம். தனிப்பட்ட முறையில் எங்களை கூடுதலாக புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்டுள்ளோம். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள். இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு எங்களுக்கு தனிமையைக் கொடுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


🙏தடுப்பூசி முக கவசம் அவசியம்🙏