ஒரு வரிச் செய்தி துளிகள்

 


    👉அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ரூ. 10 கோடி மதிப்பீட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, ஆளில்லா வான்வழி வாகனக் கண்காட்சியை பார்வையிட்டார்.


    👉மறைந்த முப்படைகளின் தலைமை தளபதிக்கு பத்ம விருது.


மறைந்த தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூசன் விருது-மத்திய அரசு.


2022ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ  விருதுகளை அறிவித்தது மத்திய அரசு.


பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகி உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு.


காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  


இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


    👉சென்னை : பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர் பாபு, எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு 


பிராட்வே பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவது குறித்து ஆய்வு


    👉சட்டசபையில் ஆண்மையோடு பேசும் அதிமுகவை பார்க்க முடியவில்லை- பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு


    👉 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் பெயரில் தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. 


புதிய தரமான உணவகத்திற்கு அனுமதி வழங்க ஏற்பாடு - போக்குவரத்துத்துறை உத்தரவு


    👉 ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரிவிலக்கு வழக்கில் நடிகர் விஜய் குறித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம் - சென்னை உயர் நீதிமன்றம்


 👊👉மக்களுக்கு திமுக மீது கோபம்; அதிமுக மீது பாசம் - அமைச்சர் ஜெயக்குமார்


     👉புதுக்கோட்டை, நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடக்கோரிய வழக்கு முடித்து வைப்பு -  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 


*கடந்த டிச.30ஆம் தேதியே துப்பாக்கி சுடும் பயிற்சித்தளம் மூடப்பட்டதால், இனி பயன்படுத்தப்பட மாட்டாது - தமிழக அரசு வாதம்


    👉அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசர தேவையாக உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி


      👉நீட் தேர்வு - அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரிப்பு


    👉அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்


முறையான விசாரணையை வலியுறுத்தி பாஜக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் நிறைவு பெற்றது.


நிருபர் பாலாஜி