நாளை மறுநாள்(23-01-22) ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். தமிழக அரசு அறிவிப்பு.
ஞாயிறு ஒரு நாள் முழு ஊரடங்கு போது தனியார் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி. உணவுகள் பார்சல் மட்டும் அனுமதி தமிழக அரசு.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போது பால், மருந்து வினியோகம் செயல்படும். வெளியூர் பயணிகள் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கமான ஆட்டோக்களுக்கு அனுமதி.
சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்களில் செயலிகள் மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள், ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி முதல்வர்.
மாவட்ட ரயில் நிலையங்களிலும் வெளியூர் பேருந்து நிலையங்களிலும் ஆட்டோ டாக்சி சேவைக்கு அனுமதி தமிழக அரசு.
கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடரும் தமிழக அரசு.
திருமதி மோகனா செல்வராஜ்