மொரீசியஸ் நாட்டில் மெட்ரோ ரயில் திட்டத்தில் இந்திய வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முக்கிய ரயில் நிலையத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்படும் - மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்
👀👀❤👀👀❤👀👀
💥 நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகியுள்ள ஹரிநாடாரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர்
நடிகைக்கு கொலைமிரட்டல் வழக்கில் கைதான ஹரிநாடாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
👀👀❤👀👀❤👀👀
💥முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்த கூடாது- காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு
👀👀❤👀👀❤👀👀
💥பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு
👀👀❤👀👀❤👀👀
💥பிரபல ரவுடி காஞ்சிபுரம் தியாகு சிறப்பு தனிப்படை போலீசாரால் ஹரியானா மாநிலத்தில் கைது.
போலீஸ் என்கவுண்டருக்கு பயந்து தலைமறைவாக இருந்து வந்த தியாகு கைது எனத் தகவல்
👀👀❤👀👀❤👀👀
💥தேனியில் அனுமதியின்றி ரூ.500 கோடிக்கு கிராவல் மண் எடுத்த விவகாரம்-நீதிமன்றம் புதிய உத்தரவு
👀👀❤👀👀❤👀👀
💥மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு - மாநில கல்வித்துறை
👀👀❤👀👀❤👀👀
💥அன்பழகன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது; இதுவரை சுமார் 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி பொருட்களும் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.1.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
மக்களை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
👀👀❤👀👀❤👀👀
💥தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா?
* யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
* அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது - மதுரைக்கிளை
👀👀❤👀👀❤👀👀
💥பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.23.81 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதான கூடம், மின் தூக்கி, நாதமுனி மண்டபம் ஆகியவற்றை காணொலிக்காட்சி வாயிலாக திறந்துவைத்தார் முதலமைச்சர்
👀👀❤👀👀❤👀👀
💥திமுக அரசு கடந்த 9 மாதங்களாக மக்களிடம் தோல்வி அடைந்து விட்டது. அதனை மக்களிடம் இருந்து திசை திருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விடுகிறது.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
👀👀❤👀👀❤👀👀
💥கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் வாபஸ் பெற்றது இங்கிலாந்து அரசு
வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை இனி இல்லை - இங்கிலாந்து அரசு
கட்டாய முகக்கவசம் உட்பட கொரோனா நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
👀👀❤👀👀❤👀👀
சத்துணவு
💥அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கிட உத்தரவு
👀👀❤👀👀❤👀👀
நிருபர் பாலாஜி