ஓபிஎஸ், ரவீந்திரநாத் எம்பி மீது வழக்குப்பதிவு மேலும் சில செய்தித் துளிகள்

 


    வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக ஓபிஎஸ், ரவீந்திரநாத் எம்பி மீது வழக்குப்பதிவு  


சிறப்பு நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் ஆகிய இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இபிகோ 156 (3) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

            👀👀❤👀👀❤👀👀

திருச்சியில் முழு ஊரடங்கான இன்று முகக்கவசம் அணியாமல் வந்த 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை

            👀👀❤👀👀❤👀👀

சண்டிகர் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி பாஜக வெற்றி - இது அப்பட்டமான "ஜனநாயக படுகொலை" என்று ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

            👀👀❤👀👀❤👀👀

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் I.G.யாக நியமனம் பெற்றிருக்கும் தூத்துக்குடி கொங்கராயக்குறிச்சியில் பிறந்த ஆசியம்மாள் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.-கனிமொழி எம்.பி

            👀👀❤👀👀❤👀👀

டெல்லி, நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது


* இம்மாத இறுதியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் 400 பேருக்கு பாதிப்பு. 400 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பிவைப்பு.

            👀👀❤👀👀❤👀👀

ஜன.31 வரை கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

            👀👀❤👀👀❤👀👀

கொரோனா ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தகவல்கள், ஆலோசனைகளை பெற உதவி எண்கள் அறிவிப்பு 


94981 81236, 94981 81239,72007 06492, 72007 01843 என்ற எண்களில் ஆலோசனை பெறலாம்

            👀👀❤👀👀❤👀👀

இஸ்லாமியப் பெண்கள் பற்றி அவதூறு கருத்துகளை பதிவேற்றிய ’சல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்கூர் என்பவரை மத்திய பிரதேசத்தில் கைது செய்தது டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ்

            👀👀❤👀👀❤👀👀

நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நாடாளுமன்ற சட்டமன்ற மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு


அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும்; நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

            👀👀❤👀👀❤👀👀

ஆளுநருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு 


சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்திப்பு

            👀👀❤👀👀❤👀👀

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ₨217.96 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம்


 இன்று ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி நேற்று அதிக மது விற்பனை

            👀👀❤👀👀❤👀👀

திருப்பத்தூர்; செவ்வாத்தூர் புதூர் பகுதியில், உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் எனக்கூறி ₨4.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவர் கைது


 திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கும், ராஜேஷுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என திருப்பத்தூர் காவல்துறை விளக்கம்

            👀👀❤👀👀❤👀👀

சென்னை தியாகராயர் நகரில் வாகன தணிக்கையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 80 கிலோ தங்கத்துடன் வாகனம் சிக்கியது.

            👀👀❤👀👀❤👀👀


நிருபர் பாலாஜி 


🙏தடுப்பூசி முககவசம் கட்டாயம்🙏