🙏இன்று திருவள்ளுவர் தினம் வணங்குவோம் 🙏

 


       🙏இன்று திருவள்ளுவர் தினம்🙏


🙏தமிழன்னை ஈன்றெடுத்த தன்னிகரற்ற தவப்புதல்வர் திருவள்ளுவர். இவருக்கு நிகரான ஒருவர் இன்னும் பிறக்கவில்லை.


🙏உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் தினம் இன்று. திருவள்ளுவரைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.


🙏உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த பெருந்தகை திருவள்ளுவர்.🙏அறிவியலாளர்களாலும், அரசாண்ட மன்னர்களாலும் உருவாக்கித் தர இயலாத பெருமையை வள்ளுவர் தந்துள்ளார்.


 🙏இரண்டடி வாக்கியத்தில் உலகையே உள்ளடக்கியவர் திருவள்ளுவர். பிறப்பு இறப்பு வாழ்க்கை அனைத்தையும் குறலில்  உள்ளடக்கி வழிகாட்டியவர் திருவள்ளுவர் வணங்க வேண்டியவர்.


❤தலைவர்கள் வாழ்த்து❤    🙏திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்வீட்


கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை காணொலியை பகிர்ந்து பிரதமர் ட்வீட்    🙏சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை


திருவள்ளுவர் தினத்தையொட்டி திருக்குறள் நாட்காட்டியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


திருக்குறள் ஓவியக்கால பேழை புத்தகத்தையும் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


நிருபர் ராகவன்