இரு வரி செய்திகள்

 


     👉புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒடிசா புரி கடற்கரையில் அழகிய மணற்சிற்பம் வடிவமைத்து அசத்தியுள்ளார் கலைஞர் சுதர்சன் பட்நாயக்

                  👀👀❤👀👀❤👀👀

     👉வைஷ்ணோ தேவி கோயில் துரதிர்ஷ்டவசமான நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்தனர் என்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் - குடியரசுத் தலைவர்

                👀👀❤👀👀❤👀👀

 👉TASMAC கடைகளில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 148 கோடிக்கு மதுபான விற்பனை


கடந்தாண்டு 159 கோடிக்கு விற்பனையாகி நிலையில் இந்த ஆண்டு சுமார் 11 கோடி விற்பனை குறைவு

                👀👀❤👀👀❤👀👀

    👉மத்திய அரசிடம் இருந்து நிதி வரும் வரை காத்திருக்காமல் பயிர்சேத இழப்பீடாக ₨30 ஆயிரமும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ₨5 ஆயிரம் வழங்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

                👀👀❤👀👀❤👀👀

      👉சென்னை வானிலை ஆய்வு மைய செயல்பாடுகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

                👀👀❤👀👀❤👀👀

      👉தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 2009 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு


இதேபோல 2006 பேட்ச்-ஐ சேர்ந்த 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

                👀👀❤👀👀❤👀👀

      👉சென்னையில் தடையை மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 269 வழக்குகள் பதிவு - போக்குவரத்து காவல்துறை


 மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு - போக்குவரத்து காவல்துறை

                👀👀❤👀👀❤👀👀

      👉புத்தாண்டை ஒட்டி தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வருகை


தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், வாழ்த்து பெற்றும் வருகிறார்

                👀👀❤👀👀❤👀👀

      👉சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₨103.50 குறைந்து ₨2,131-க்கு விற்பனை

                👀👀❤👀👀❤👀👀

      👉50% இருக்கை கட்டுப்பாடு காரணமாக 5 ம் தேதி சட்டசபை  கூட்டத்தை  கலைவாணர் அரங்கில்  நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாவதாக தகவல்


ஜனவரி 5ஆம் தேதி கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டம்.

                👀👀❤👀👀❤👀👀

      👉குஜராத் மீனவர்களுக்கு பாதிப்பு என்றால் பிரதமர் மோடி துடிக்கிறார்; தமிழக மீனவர்கள் என்றால் கண்டுகொள்வதில்லை - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு


 பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர் அணியை ஏற்படுத்த வேண்டும் - வைகோ

                👀👀❤👀👀❤👀👀

      👉புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்தால் முதல்வர் ரங்கசாமியே பொறுப்பேற்க வேண்டும் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

                👀👀❤👀👀❤👀👀


 டெல்லியில் பிரதமர் மோடி உடன் திருப்பதி மற்றும் ஸ்ரீசைலம் கோவில்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள் சந்திப்பு


திருப்பதி மற்றும் ஸ்ரீசைலம் கோவில்களின் பிரசாதங்களை பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி

                 👀👀❤👀👀❤👀👀


நிருபர் பாஸ்கர்