மின் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு     👉மின்சார சட்டத் திருத்த மசோதா  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து மின் ஊழியர்கள் பேரணி மற்றும் வேலை நிறுத்தம் அறிவிப்பு.


டிசம்பர் 15ம் தேதி டெல்லியை நோக்கி பேரணியும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சேப்பாக்கத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு; 


பிப்ரவரி 1ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும் முடிவு.        மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் சிக்கின


    👮கறுப்புப் பெட்டி கண்டறியப்பட்டது. 


சூலூர் விமான படை தளத்திலிருந்து வந்த  அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நேற்றிரவு ஆய்வு; கறுப்பு பெட்டியும் எடுத்துச்செல்லப்பட்டது.


     🙏மதுரை காளவாசலில் 50 பயணிகளுடன் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஆறுமுகம்  மாரடைப்பால் உயிரிழப்பு.


சாமர்த்தியமாக பேருந்தை இயக்கியதால் அதிஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் உயிர் தப்பினர்.


     💢💥தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டி; கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு - கோலி, ரோஹித், ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ், விஹாரி, பண்ட், சஹா, அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த், சமி, உமேஷ், பும்ரா, ஷர்துல் தாகூர், சிராஜ்


     👮இரட்டை கொலை - ஒருவர் கைது👮


விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே நகைக்காக இரட்டை கொலை செய்த வழக்கில் கவிதாஸ்(30) என்பவர் கைது


விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்


    👩 நகராட்சி பொறியாளர் வங்கி கணக்கு முடக்கம்👩


ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்


நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் ₨23.5 லட்சம் பணம், 193 சவரன் நகைகள், 2.17 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் முடக்கம்


    👉3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள்  போராட்டத்தை முடித்துக் கொள்வது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளனர்


தங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அரசின் உறுதிப்படுத்திக்கொண்டு போராட்டம் முடித்து கொள்ள படுகிறது.


     👉மூதாட்டியிடம் லஞ்சம்: விருதுநகர் அருகே ஊராட்சி செயலாளர் கைது!


     👉இலங்கை: 3 தீவுகளில் மேற்கொள்ளவிருந்த மின் திட்டங்களை கைவிட்டது சீனா


     👉ஊழல் குறியீட்டில் தமிழகம் தான் முதலிடம்! அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு.


நிருபர் பாலாஜி