முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி.பிரதமர் மோடி

 


     கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தனது உரையை துவங்கினார்.


இந்தியாவில் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது.ஒமிக்ரான் பரவலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை - பிரதமர் மோடி


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.கைகளை கழுவ வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்.


குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள், 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன - பிரதமர் மோடி


   15 - 18 வயதுள்ளவர்களுக்கும் தடுப்பூசி.


இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது-பிரதமர் மோடி அறிவிப்பு.      


தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது-  பிரதமர் நரேந்திர மோடி.


 மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.


நாட்டில் 61% பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி.


இந்தியாவில் இதுவரை 141 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.


18 வயதுக்கு மேற்பட்டோரில் 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி.


 முன்கள பணியாளர்களுக்கு  பூஸ்டர் தடுப்பூசி.


நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.


 15 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சினுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது


 கொரோனாவுக்கு எதிரான மூக்கு வழியாக செலுத்தப்படும் உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது - பிரதமர் மோடி.


 நிருபர் கபூர்


🙏தடுப்பூசி முக கவசம் அவசியம்🙏