சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு:

   


 

                    சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு:


வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15. 12 .2021 ஆம் தேதி  முகமூடி அணிந்து கொண்டு ஒரு நபர் கடையின் சுவற்றில் துளையிட்டு கடையின் உள்ளே இறங்கி பலகோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர  நகைகளைத் திருடி சென்று விட்டார்.


இது சம்பந்தமாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் வழக்கு சம்பந்தமாக குற்றம் நடந்த இடத்தை கண்காணித்து சுமார் 200 க்கும் மேற்பட்ட  CCTV காட்சிகளை கண்காணித்து. 


குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த டீக்காராமன் ( 22 ) தந்தை பெயர், விஜயன் என்பவரை அடையாளம் கண்டு (20.12.2021) அனறு ஒடுக்கத்தூர் பாலத்தின் அருகே தனிபடையினர் கைது செய்தனர்.


அவனை விசாரித்த போது மேற்கண்ட ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் உள்ளே புகுந்து முகத்தில் சிங்கம் மாஸ்க் , தலையில் விக் அணிந்து கொண்டு நகைகளை கொள்ளை அடித்தை ஒப்புக்கொண்டு பிறகு கொள்ளையடித்த நகைகளை ஒடுக்கத்தூர் சுடுகாட்டில் புதைத்து வைத்து இருப்பதாக தெரிவித்ததின்பேரில் தங்கம் மற்றும் வைர நகைகள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது . 


திருடுபோன  15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளின் மொத்த மதிப்பு ரூ .10 கோடி ஆகும்.



களவுபோன 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை இரவு பகல் என்று பாராமல் சம்பவம் நடந்த 5 நாட்களில் கண்டுபிடித்த தனிப்படையினரை காவல்துறை இயக்குநர் , கூடுதல் காவல்துறை இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு , வடக்கு மண்டல காவல் துறை தலைவர் , வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் வெகுவாக பாராட்டினார்.


நிருபர் பாலாஜி