திருவெற்றியூர் திமுக பகுதி செயலாளரை வாழ்த்தினார் முதல்வர்

 


        திருவொற்றியூர் குடியிருப்பு வாசிகளை எச்சரிக்கை செய்து, தக்க நேரத்தில் வெளியேற்றிய திமுக பகுதி செயலாளரை தலைமைச் செயலகம் அழைத்து பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 


சட்டமன்றத்தில் அறிவித்தபடி


ரூ.1702 கோடியில்  மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் முன்மாதிரி திட்டம்- முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு


பொங்கல் பரிசாக ‘C’, ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3,000, ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். 


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.



துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை.


பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி& மேம்பாடு, கற்றல் அடைவு திறன் மேம்பாடு, உலகளாவிய தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தல், தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து ஆலோசனை.

            👀👀👀👀👀

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு தொடங்கிவைத்தனர்.


இதன்மூலம் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம்.

            👀👀👀👀👀

ஒமிகிரான் பரவல்:தலைநகர் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்


மெட்ரோ,உணவகங்கள்,பார்கள் ஆகியவை 50 %இருக்கைகளுடன் செயல்படவும் சினிமா அரங்குகள்,ஸ்பாக்கள்,ஜிம்,ஆடிட்டோரியம், விளையாட்டு அரங்கங்களை மூடவும் டெல்லி அரசு உத்தரவு

            👀👀👀👀👀

ஜம்மு நகரில் அமைகிறது அப்போலோ மருத்துவமனை - ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் மற்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


நிருபர் பாலாஜி