இன்றைய ராசிபலன் 05.12.2021 கார்த்திகை ( 19 ) ஞாயிற்றுக்கிழமை.!!
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்
மிதுனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குங்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியிடம் ராஜதந்திரத்தை கற்றுக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.
கன்னி
கன்னி: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.
துலாம்
துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியமான முடிவு எடுக்கும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மகரம்
மகரம்: எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கும்பம்
கும்பம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும்நாள்.
மீனம்
மீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் நன்மை உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்...
*சுபம்*
திருமதி மோகனா செல்வராஜ்
🙏தடுப்பூசி கட்டாயம் போட்டுக்க வேண்டும்🙏