ஒரு வரிச் செய்தி துளிகள்

 


        🙏சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் வி.கே.சசிகலா சந்திப்பு

 

   நடிகர் ரஜினிகாந்த் உடன் சசிகலா மரியாதை நிமித்தமாக சந்திப்பு.  தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு சசிகலா வாழ்த்து.

                    💧💧💧💧💧💧

     👊👮கன்னியாகுமரி : குளச்சலில் மீனவ மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கி விட்ட விவகாரம்


பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம். 

போக்குவரத்து துறை பொது மேலாளர் அரவிந்த் உத்தரவு.


    💢💥கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்த மூதாட்டியை பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை

                    💧💧💧💧💧💧

     👮👬கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்த   மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கு  இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

                 💧💧💧💧💧💧

     👉தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் போடப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.

                    💧💧💧💧💧💧

    👉எம்.பிக்கள் தங்கள் செயல்களை மாற்ற வேண்டும் இல்லையேல் மாற்றப்படுவீர்கள் - நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு அரிதாக வரும் பாஜக எம்.பி.களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

                    💧💧💧💧💧💧

     👤💥நீதிமன்ற உத்தரவை மதிப்பவன் நான்; அதிமுக சட்ட விதிகளின்படி அமைப்பு தேர்தல் நடக்கும்.


முதற்கட்டமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தர்மத்தின் படி நடந்து முடிந்து இருக்கிறது, தொடர்ந்து அமைப்பு தேர்தல் நடக்கும்.

- ஓ.பன்னீர்செல்வம்

                    💧💧💧💧💧💧

     ✌👨கல்லூரி மாணவர் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதனை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் நிவாரணம், அரசுவேலை வழங்க வேண்டும்

 -எடப்பாடி பழனிசாமி

                       💧💧💧💧💧💧

     ✌👉திண்டுக்கல் எரியோடு அருகே 2016ல்  நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளியான துரைபாண்டிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ 10,000 அபராதம் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு

                     💧💧💧💧💧💧

     👉💢திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியை கைது செய்யக்கோரி

                    💧💧💧💧💧💧

     💢💥சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு


முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் எளிதில் தொழில் துவங்க ஏதுவாக குறைந்த விலையில் மனைகள் கிடைக்கும்

                    💧💧💧💧💧💧

       👧விருதுநகர்; அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி பகுதியில் பரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி பெண் அனந்தாயி(26) என்பவர் உயிரிழப்பு


கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழப்பு

                    💧💧💧💧💧💧

     ✌💢குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை 2022 பிப்ரவரியில் வெளியிடப்படும்; அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.


குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு


- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்.


நிருபர் பாஸ்கர்