5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனின் 3 ஆண்டு நினைவு நாள்

     


        வடசென்னை மக்களால் ஐந்து ரூபாய் டாக்டர் என்று அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்


 2019 ஆம் ஆண்டு டிசம்பர 19 ம்தேதி  வடசென்னை மக்களால் 5 ரூபாய் டாக்டர் என்று அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன்,மீளாத துயரில் ஆழ்த்தி விட்டு மறைந்த நினைவு நாள்..


மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் நிறைந்து வாழும் டாக்டர் ஜெயச்சந்திரனின் நினைவுநாள் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களால் கடைபிடிக்கப்படுகிறது.வடசென்னை முழுவதும் அவரது சேவையை நினைவு கூறும்வகையில் சுவரொட்டிகள் சுவர்களை அலங்கரித்திருக்கின்றன. 
வடசென்னையில் கொட்டும் மழையில் மெட்ரோரயில் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று போராடியவர். டாக்டர் ஜெயச்சந்திரன் பெயர் அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் சூட்டப்பட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் இது சம்பந்தமாக சட்டமன்றத்திலும் பேசினார். 


நினைவு தினமான இன்று வண்ணாரப்பேட்டை வெங்கடாசல தெருவில் உள்ள அவர் வீட்டில் டாக்டர் ஜெயச்சந்திரனின் நினைவு நாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.இந்த நிகழச்சிகளில் ஆர்கேநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்ஜேஜே எபிநேசர், ராயபுரம் சட்டமனெற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, அமமுக மாவட்ட செயலாளர் ராமஜெயம்,ஆர்எம்டி ரவீந்திரன், கவிஞர் க.ராமலிங்கஜோதி,முன்னாள் கவுன்சிலர்கள் பாபு சுந்தரம்,மு.சம்பத், சமூக ஆர்வலர் ஏவிஎஸ்மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்று டாக்டர் ஜெயச்சந்திரனின் சேவையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். 5,ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் வாழ்ந்த பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்தில் அவர் பெயரை சூட்ட வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் மிகுந்த ஆர்வத்துடன் நம்பிக்கையுடன் உள்ளனர். முதல்வர் மிக விரைவில் இது சம்பந்தமான அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கின்றார்கள்.


🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம் அவசியம்🙏