ஒரு வரிச் செய்தி சுருக்கம்

 


     உணவின் தரம் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர்


    👉சென்னை மாநகரில் வெள்ளம் பாதிப்பு - நடவடிக்கைகளை துரிதப்படுத்த செயற்பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு



    👉சென்னை ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்கு வசிப்பவர்கள் கடந்த 3-4 நாட்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்


        👉சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டையில் மெட்ரோ வழிப்பாதையை ஒட்டி மரம் விழுந்ததால், ரயில்கள் அப்பகுதியில் மெதுவாக செல்கின்றன.



        மழைநீரில் மிதக்கும் காவல் நிலையம்....திருவல்லிக்கேணி டி-1 காவல்நிலையம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது!




    சென்னை மடிப்பாகத்தை மடக்கிய மழைநீர்.... மடிப்பாக்கம் சக்தி நகர் பகுதியை சூழ்ந்த மழைநீர்!i


       👉புதுச்சேரி ரெட்டியார்பாளைம் ஜெயாநகரில் வசித்துவரும் மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் ராய் வெளியூர் சென்ற நிலையில், அவரின் வீட்டில் 12 பவுன் தங்க நகை திருட்டு - வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை


      👉 சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு வண்ண எச்சரிக்கை ( Red Alert) விலக்கிக் கொள்ளப்பட்டது


     💢💤மணிமங்கலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை*


அடையாற்றில் வெள்ளம் செல்வதால் மணிமங்கலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


மழை நின்றுள்ளதால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது


பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி


     🙏காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் - தயவுசெய்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுங்கள். டேக் கேர் சென்னை  - காங்., எம்.பி., ராகுல் டுவீட்


➤சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நாளை சிறப்பு மருத்துவ முகாம்


➤சென்னை ஆழ்வார்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தொடங்கி வைக்கிறார்.


➤பருவமழை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்.



     மறைந்த மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.


நிருபர் பாலாஜி