இன்றைய ராசிபலன்

 


    இன்றைய ராசிபலன் 9.11.2021 ஐப்பசி ( 23 ) செவ்வாய்க்கிழமை.!!


மேஷம்


மேஷம்: குடும்பத்தில் இருந்த மனக் கசப்புகள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில்  உள்ளவர்களிடம் வளைந்துக்  கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


மிதுனம்


மிதுனம்:  உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.  உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.


கடகம்


கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


சிம்மம்


சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.


கன்னி


கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக  செய்து   முடிப்பீர்கள்.  தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். யோகா தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


துலாம்


துலாம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.


தனுசு


தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.


மகரம்


மகரம்: கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.


கும்பம்


கும்பம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.


மீனம்


மீனம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள். செயல்படுவீர்கள்  திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். 


                     *சுபம்* 


திருமதி மோகனா செல்வராஜ்

🪨🍃🪨🍃🪨🍃🪨🍃🪨🍃🪨