சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


     சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


        *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு*:


சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளதுசென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை-முதலமைச்சர்


பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன; தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளேன்


எழும்பூர், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தேன. சென்னையின் தென் பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளேன்.


சென்னையில் 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி


மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது


குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் 


-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.


நிருபர் பாலாஜி


 😷முக கவசம் உயிர்க்கவசம்😷