இன்றைய (06-11-2021) ராசி பலன்கள்
மேஷம்
நவம்பர் 06, 2021
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான மாற்றங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : சோர்வான நாள்.
கிருத்திகை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்
நவம்பர் 06, 2021
வியாபாரம் சம்பந்தமான பொருளாதார நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்புகள் உயரும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : ஒற்றுமை உண்டாகும்.
ரோகிணி : நெருக்கம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.
--------------------------------------
மிதுனம்
நவம்பர் 06, 2021
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை மேம்படும். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : புரிதல் அதிகரிக்கும்.
திருவாதிரை : மனவருத்தங்கள் நீங்கும்
புனர்பூசம் : தாமதங்கள் குறையும்.
--------------------------------------
கடகம்
நவம்பர் 06, 2021
குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். முன்னேற்றமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
--------------------------------------
சிம்மம்
நவம்பர் 06, 2021
கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பங்காளி வகை உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : சிக்கல்கள் குறையும்.
பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.
--------------------------------------
கன்னி
நவம்பர் 06, 2021
பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ஒத்துழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
அஸ்தம் : மாற்றமான நாள்
சித்திரை : வெற்றி கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
நவம்பர் 06, 2021
மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய மனை மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : கற்பனைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
நவம்பர் 06, 2021
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிடிவாதமாக செயல்பட்டு சில செயல்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை உண்டாகும். வேலையாட்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். ஆதரவுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அனுஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
தனுசு
நவம்பர் 06, 2021
செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான செயல்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அனுபவம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : லாபம் மேம்படும்.
உத்திராடம் : இழுபறிகள் நீங்கும்.
--------------------------------------
மகரம்
நவம்பர் 06, 2021
தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புரிதல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : அறிவு வெளிப்படும்.
திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும்.
-------------------------------------
கும்பம்
நவம்பர் 06, 2021
பயணம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரம் சம்பந்தமான சிந்தனைகள் மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுபிட்சமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : புரிதல் மேம்படும்.
--------------------------------------
மீனம்
நவம்பர் 06, 2021
திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வும், காலதாமதமும் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும். பொருட்சேர்க்கை அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : லாபம் மேம்படும்.
*சுபம்*
திருமதி மோகனா செல்வராஜ்
--------------------------------------