"விட்றாதீங்க அப்பா" கதறல் மனதில் ஒலிக்கிறது! முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆதங்க வீடியோ💢வீடியோ💢  
                             


அன்புக் குழந்தைகளே…

உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது; முதலமைச்சராக மட்டுமின்றி ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது; தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தர அரசு தயங்காது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


புகாரை வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுப் போகும் என்றோ, தனது மகளுக்கு நடந்ததை வெளியில் சொன்னால் ஊரார் தவறாகப் பேசுவார்கள் என்று பெற்றோரோ நினைக்கக் கூடாது.

அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகம்"

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


நிருபர் பாஸ்கர்