ஒரு வரிச் செய்தி துளிகள்

 


     👤இருளர் சமூகத்தை சேர்ந்த ராஜாகண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ₹10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவிப்பு


ஜெய்பீம் படம் குறித்த கே.பாலகிருஷ்ணனின் வாழ்த்து கடிதத்துக்கு நன்றி தெரிவித்த கடிதத்தில் சூர்யா தகவல்


      🙏ஜவாஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


     💢💥வடகிழக்கு பருவமழை மற்றும் கன்னியாகுமரி மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை - அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு


     💢💥கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனிடம் முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தகவல்!


     👉அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிகாலம் நீட்டிப்பு – அவசர சட்டத்திற்கு ஒப்புதல்.


     💢💥சென்னையில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) விடுமுறை - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


     💢💥தொடர் மழை பெய்து வருவதால் சுற்றுலா நோக்கில் ஏற்காடு செல்வதை தற்போதைய சூழலில் பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும் " - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அவர்கள் வேண்டுகோள்..


     👉நாளைக்குள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் - தமிழ்நாடு அரசு


‘ 👮காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ்’- விவரங்கள் கேட்டு டிஜிபிக்கு போக்குவரத்து துறை கடிதம்.


 நிருபர் கார்த்திக்