ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை அதிரடியாக குறைப்பு.

 


        சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை ரூ.10 ஆக குறைப்பு.


கொரோனா பரவல் காரணமாக அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க ரூ.50 ஆக உயர்த்தி வசூலிக்கப்பட்டு வந்தது.


மதுரை கோட்டத்தில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் குறைப்பு


கொரோனா தொற்று காலத்தில் ரயில் நிலையங்களில்சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அதிக கூட்டம் சேருவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  

மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டு கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது.  தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைமேடை சீட்டு கட்டணம் ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.   


ரயில் பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


     🙏கொரோனா காலத்தில் ரயில்வே நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டதை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தேன்,  மீண்டும் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன், அதற்கென தனி கவுண்டர் துவக்கப்பட வேண்டும்.- சு.வெங்கடேசன், மதுரை எம்.பி


நிருபர் கார்த்திக்


🙏 கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்🙏