ஒருவரி செய்தி சுருக்கம்

 


        💢தமிழகம் முழுவதும் 11 நகராட்சிகளின் ஆணையர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.*


      👮பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாட  '1098' என்ற இலவச அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்


உதவிகளுக்கு '89033 31098' என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் - கரூர் ஆட்சியர்


     💥சத்தியமங்கலம்: ஆசனூர்  வனப்பகுதியில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு.


     ✌நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை முழுமையாக வென்று ஒயிட்வாஷ் செய்தது இந்தியா


சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய இளம்படை


ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ், ரோகித் ஷர்மா தலைமையிலான இளம்படை அபாரம்


  👮கரூர் மாணவி தற்கொலை விவகாரம்.


வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு.


     💢திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் சாத்தனூர் அணை ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட தடை டிசம்பர் 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு


     💢💥பெண்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்களை இயற்ற வேண்டும்;


தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி பின்னர் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


     💁இன்றைய ஆட்சியாளர்கள் ஜெயலலிதா போன்று உறுதியான நடவடிக்கைகளை எடுத்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றினால்தான், தமிழக மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ முடியும்-வி.கே.சசிகலா


     👮👊உதகையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 பேர் கைது


உதகையைச் சேர்ந்த அப்துல் ரகுமான், கோவையைச் சேர்ந்த தீனதயாளன், பாண்டிசேரியைச் கோபிநாத் ஆகியோரிடமிருந்து ₹25,500 கள்ள நோட்டுகள் பறிமுதல்


நிருபர் மணிவண்ணன்