3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகின்றன- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு... தலைவர்கள் கருத்து

 


          3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகின்றன- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு


3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டது.-  பிரதமர் நரேந்திர மோடி.


டெல்லி எல்லையில் கூடியுள்ள விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் – பிரதமர்


விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம் என பிரதமர் மோடி தனது உரையில் உறுதி


வரும் குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய நடவடிக்கை – பிரதமர்


இந்த மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களும் திரும்பபெறப்படும்


டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்ப பிரதமர் மோடி வேண்டுகோள்.


💢வாபஸ் பெறப்பட்ட 3 வேளாண் சட்டங்கள்


சட்டம் 1 - அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020


சட்டம் 2 - விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020


சட்டம் 3 - விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020


💥வேளாண் துறைக்கு ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும்


வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும் – பிரதமர்


குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் இடம்பெறுவர்.


🙏3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.


🙏வேளாண் சட்டங்கள் வாபஸ் – விவசாயிகள் வரவேற்பு


3 வேளாண் சட்டங்களும் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம் – விவசாயிகள் சங்கம்


வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றி சமர்பணம்


💢நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது: ராகுல்காந்தி கருத்து


"💥பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" - மம்தா பானர்ஜி


💢உழவர் பக்கம்நின்று போராடியதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கது; 


அறவழி போராட்டத்தால் உரிமைகளை வென்றெடுத்து இது காந்தியின் மண் என உழவர்கள் உலகிற்கு எடுத்து சொல்லியிருக்கிறார்கள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


💥மத்திய அரசு காலம் கடந்து முடிவு எடுத்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது: தொல்.திருமாவளவன் எம்.பி.


💢பிரதமர் மோடியின் அறிவிப்பை ஏற்று போராட்டம் வாபஸ் - விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு


🙏விவசாயிகள் மீதான அதீத அக்கறையால் தான் பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றுள்ளார்: பாஜக தேசிய தலைவர் ஜெ பி நட்டா கருத்து


💢மக்கள் புரட்சிக்கு முன் எத்தகைய வலிமைபெற்ற அரசும் வீழ்ந்தே தீரும் என்பதற்கு மற்றுமொரு வரலாற்று சான்றாக வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது - சீமான்


🙏வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டதன் மூலம் பிரதமர் மோடியின் பெருந்தன்மையும் விவசாயிகள் மீது வைத்திருக்கும் அக்கறையும் வெளிப்பட்டுள்ளது;


 பிரதமர் விவசாயிகளின் நண்பன் என வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது-  ஓ.பன்னீர்செல்வம்.


நிருபர் மணிவண்ணன்