தைப்பொங்கலை கொண்டாட குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 


     தமிழ்நாட்டில் தைப்பொங்கலை கொண்டாட குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    

 தமிழக மக்கள் தை பொங்கலை சிறப்பாக கொண்டாட அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும்


 கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் 


மேலும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


நிருபர் ராகவன்