திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி- முதல்வர் அறிவிப்பு

 


       திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி- முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் திருடர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது  வெட்டிக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதல்வர் அறிவிப்பு.


👉சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதன்  ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.


அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக சட்டம் ஒழுங்கு ADGP தாமரைக்கண்ணன் கோவையில் இருந்து திருச்சி சோழமாநகருக்கு வந்துசேர்ந்தார்.


திருச்சி வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூமிநாதன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


👉சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது; விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் பேட்டி


சோழமாநகரில் உள்ள இடுகாட்டில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு.


         😥தலைவர்கள் இரங்கல்😢


எஸ்.ஐ கொலை - அண்ணாமலை இரங்கல்


புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட 

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்


பணி நேரத்தில் காவலர்கள் கொல்லப்படுவதற்கு விரைவில் சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் - அண்ணாமலை


திருச்சி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது 


* காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது? - டி.டி.வி.தினகரன் ட்வீட்


நிருபர் பாஸ்கர்