திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா காலமானார்

 


       சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா காலமானார்*


இன்று வீரபாண்டி ராஜா பிறந்தநாளை யொட்டி தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்..


 திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


 கட்சி பதவிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டவர் ராஜா என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.


 மேலும் அவர் எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதனை திறம்பட செய்து முடிக்கக்கூடியவர் வீரபாண்டி ராஜா என்றும் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்


நிருபர் பாலாஜி