ஒரு வரிச் செய்தி சுருக்கம்

 


      சேலம் மாவட்டத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில், தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 


    👉 ராணிப்பேட்டையில் திமுக - அதிமுக மோதல்


ராணிப்பேட்டை: சிப்காட் வ.உ.சி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக - அதிமுக இடையே மோதல்


வாக்குச்சாவடிக்கு அருகே அதிமுகவினர் பேனர் வைத்ததாக கூறி இருதரப்புக்கு இடையே கைகலப்பு.


    👉மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுப்பதற்காக வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்.


வடக்கு மாட தெருவில் சாலை இருபுறங்களிலும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது


தனிமனித இடைவெளியின்றி பெரும்பாலான பக்தர்கள் முறையாக முகக்கவசம் அணியாமல் குவிந்தனர்


     👉சென்னை மெரினா பகுதியில் மேலும் ஒரு வாலிபர் கடலில் மூழ்கி பலி


தெலங்கானாவை சேர்ந்த 4 பேர் எச்சரிக்கையை மீறி குளிக்கச் சென்றபோது சாய் என்ற வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு


     👉மதுரை மாநகராட்சியில் 22.49 கோடி ரூபாய் வரிகள் நிலுவை.


15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை

 

    👉ஆன்லைன் பதிவு குறித்த ஒன்றிய அரசின் உத்தரவு பற்றி விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை” - அமைச்சர் சக்கரபாணி


     👉உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9ஆம் தேதி விடுமுறை: அண்ணா பல்கலை.


     👉தமிழ்நாட்டில்  கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் விதிக்கப்பட்ட தடை நீக்க வேண்டும்;


அக்7-ம் தேதி 12 கோயில்கள் முன்பு பாஜக சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்.


- அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்


     👉மருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீட்டுக்கு இந்த ஆண்டு எந்த தடையும் விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு


இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக முறையீடு


     👉அரியலூர்  சோழன் குறிச்சி அய்யனார் கோவில் அருகே பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற தலைமை ஆசிரியர் கொலை.


     👉தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.


     👉புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வேளாண் அதிகாரி போல் பேசி விவசாயியிடம் ரூ.2.97 லட்சம் மோசடி நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை


    👉வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹ 15 உயர்வு.


விலை உயர்வையடுத்து இன்று முதல் ஒரு சிலிண்டர் ₹ 915.50-க்கு விற்பனை.


நிருபர் பார்த்திபன்


😷முதல் கவசம் உயிர் கவசம்😷