ஒருவரி செய்தி சுருக்கம்

 


        ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று இறுதிப் போட்டியில் சென்னை ,கொல்கத்தா அணிகள் மோதல், கோப்பையை வெல்லும் அணி யார்?


       👉 காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உடல்  நிலை சீராக உள்ளது -அப்போலோ மருத்துவமனை.


        👉வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்


        👉பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்ததை தொடர்ந்து அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சேகர் பாபு


இன்று முதல் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க அனுமதி


மதுரை மீனாட்சியம்மன் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் நடை திறப்பு


    👉திண்டுக்கல் மாவட்டம்  பூலத்தூர் மலைக் கிராமத்தில்  ஊராட்சி தலைவர் ஆனந்த் என்பவரின் சகோதரர் மணிமாறன் கொலை. கொலையாளிகள் தலைமறைவு.


    👮சிதம்பரம் நந்தனார் அரசுப் பள்ளியில் மாணவரை பிரம்பால் அடித்து, காலால் உதைத்த ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.


    👮வங்கதேசத்தில் இந்து கோயில்கள் மீது தாக்குதல்: 4 பேர் பலி, 100 பேர் கைது.


    👮சென்னை பனையூரில் முன்னே சென்ற ஒரு பைக்கின் மீது, அதிவேகமாக வந்த இரண்டு பைக்குகள் மோதி விபத்து


பெற்றோர் கண் முன்னே 2 வயது குழந்தை உயிரிழப்பு குழந்தையின் தந்தை, தாய் மருத்துவமனையில் அனுமதி.


அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய இரண்டு இளைஞர்கள் கைது


    👉பழனி மலைக்கோவில் அன்னதானத்தில் மாற்றம் கொண்டுவர பணிகள் தீவிரம்.


காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி தோசை உப்புமா கேசரி பொங்கல் உள்ளிட்ட உணவுகள் வழங்க ஏற்பாடு.


    🙏பிரதமர் மோடி இல்லை என்றால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியுமா? - அமித் ஷா


நிருபர் பாஸ்கர்