ஒரு வரிச் செய்தி சுருக்கம்

 


         👉மெட்டி ஒலி’ தொடரில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது (40)


     👉சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய சாலைப் பணிகள் மேற்கொள்ளும்போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து (Milling) பணிகளை மேற்கொள்ள வேண்டும்


 -தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு.


    👉கல்வித்துறையில் ஒவ்வொரு விஷயத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்திவருகிறார்; எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அது மாணவர்களுக்கு பலன் தருமா என்று ஆராய்ந்து செயல்படுத்துகிறார்


- அமைச்சர் அன்பில் மகேஸ்.


     👉கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்காக நடுத்தர லிப்ட் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.


 👉அதிமுக பொன்விழாவை ஒட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை     👊👉திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள மாங்கரை பிரிவில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


.     👉20 நாட்களில் கைதிகளின் பட்டியல் தயார்''


*தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் பட்டியல் 20 நாட்களில் தயார் செய்யப்படும் - அமைச்சர் ரகுபதி


    👉ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார்; அதற்கு இந்த அரசு முழு முயற்சி எடுக்கும்


- சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.


     🙅🙏எம்.ஜி.ஆர் இல்லத்தில் ச‌சிகலா


சென்னை, ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு ச‌சிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


*எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


நிருபர் விக்னேஷ் 


😷முக கவசம் உயிர் கவசம்😷