இன்றைய ராசிபலன்

 


       இன்றைய ராசிபலன் 04.10.2021 புரட்டாசி ( 18 ) 


மேஷம்


மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: பழைய பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


மிதுனம்


மிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப் பார்கள். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.


கடகம்


கடகம்: குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உடல் நலம் சீராகும். பிரச்சினைகள் வெகுவாக குறையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மாற்றம் ஏற்படும் நாள்.


சிம்மம்


சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.  விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.


கன்னி


கன்னி: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வரவுக்குமிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தை சீர் செய்ய அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள்.  அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டிய நாள்.


துலாம்


துலாம்: குடும்பத்தில்  உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.   மன நிம்மதி பெறும் நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர் கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.  புகழ் பெருகும் நாள்.


தனுசு


தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோ கத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


மகரம்


மகரம்: சந்திராஷ்டமம் இருப் பதால் இனம் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியா பாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர் களுடன் அளவாக பழகுங்கள். கவனம் தேவைப் படும் நாள்.


கும்பம்


கும்பம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரத்தில் புதியவர்கள் அறிமுக மாவார்கள். திடீரென்று அறிமுக மாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.  மகிழ்ச்சி பெருகும் நாள்.


மீனம்


மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந் தினர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


                        *சுபம்*


திருமதி மோகனா செல்வராஜ்