இரு வரி செய்திகள்

 


        மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது.


மயிலாடுதுறையில் காலை 6.30க்கு புறப்பட்டு காலை 9.45க்கு திருச்சி சென்றடையும்.

மீண்டும் மாலை 6.15க்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும்.******

💢உலகச் செய்திகள்


அமெரிக்கப் படைகள் வெளியேறியதில் இருந்து ஆப்கானிஸ்தானில் குழப்பம், வறுமை மற்றும் பட்டினி போன்றவை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


*****

💢மாநிலச் செய்திகள்.


நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா இன்று முதல் தொடங்கியது. ஒன்பது நாட்களுக்கு நவராத்திரி கொண்டாடப்பட்டு பத்தாவது நாள் தசரா கொண்டாடப்படுகிறது.


******


சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்படும் எனவும், வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் வரும் 15ஆம் தேதி முதல் மார்ச் 31, 2026 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளது.


******


💢அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு:


மகாராஷ்டிர மாநிலத்தில் பண்டிகை காலங்களை முன்னிட்டு இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளன.


******


நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்:


கிராமப்புற நிலங்களை அளந்து சொத்து அட்டை வழங்கும் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


*****

💢மாவட்டச் செய்திகள்


தசரா பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வரும் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் அவசர வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுகளை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


******


பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் இடையே அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் 2ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் 9ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


******

💢விளையாட்டுச் செய்திகள்


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி:


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க;ரு அணிக்கு எதிரான 52வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று மாலை 03.30 மணிக்கு நடைபெறும் 53வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு 07.30 மணிக்கு நடைபெறும் 54வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.


முதல் டி20 கிரிக்கெட் போட்டி:


இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையே முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.


நிருபர் கார்த்திக்

🙏🙏🙏🙏🙏