இரு வரி செய்திகள்

 


      பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற ரஜினிகாந்த்


    🙏என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி


- நடிகர் ரஜினிகாந்த்


     💢👉பெண் SP-க்கு பாலியல் தொல்லை விவகாரம்: விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடைகோரி சிறப்பு DGP ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. விசாரணையை தாமதப்படுத்தும் தொடர் முயற்சி தோல்வி


     💢👉ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம் மாட்டுத் தீவன நிறுவனத்துக்கு சொந்தமான 11 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை


    💢👉புதுச்சேரியில் நவ.8ல் பள்ளிகள் திறப்பு


புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும்


வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் - அமைச்சர் நமச்சிவாயம்     💢👉பெகாசஸ் உளவு வழக்கில் அவகாசம் அளித்தும் ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை; ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு     💢👉நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நவம்பர் 1ம்  தேதி வெளியிட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.     💢👉தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெ.டன் யூரியா ஒதுக்கீடு


தமிழ்நாட்டிற்கு 90,000 மெ.டன் யூரியாவை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு - வேளாண் துறை


மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழகத்திற்கு யூரியா ஒதுக்கீடு     👮👉பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கீரனூர் ஆய்வாளர் வீரகாந்தி மீது வழக்கு பதிவு*


பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய  வீரகாந்தி பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகாரின் அடிப்படையில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வீரகாந்தி மீது வழக்குப் பதிவு.


  

     💢👉சென்னை கோவிலாம்பாக்கத்தில் கழிவுநீர் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நிருபர் கார்த்திக்