பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிணார்

 


           டெல்லி: 257 நாட்களில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிணார் . 


மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் இந்த சாதனை சாத்தியமானது, மக்களுக்கு வாழ்த்துக்கள். தடுப்பூசிகள் செலுத்த தொடங்கியபோது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம் என்று அவர் தெரிவித்தார்.


 உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம் என கூறினார்.


 இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருட்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நம் மக்களை பாதுகாத்துள்ளது. இனி வரும் காலங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


😷முக கவசம் உயிர்க்கவசம்😷