ஒரு வரிச் செய்தி சுருக்கம்

 


    💥பள்ளிக்கல்வித்துறை சார்பில் "இல்லம் தேடி கல்வி" என்ற புதிய திட்டம் தொடக்கம்


திட்டத்திற்கான விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்


💢💤பள்ளி மாணவர்களுக்கு 1.75 லட்சம் மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

    

      💥💦 பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'COVAXIN' தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு வரும் 26ஆம் தேதி கூடுகிறது.


- WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தகவல்


     🙏கரூர்: மனு அளித்த 24 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு வீடு வழங்கிய ஆட்சியர்


     💥💦சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு: தமிழக அரசு


     💥💦2016,17,19 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற..


அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டங்களில் தொடர்புடைய தற்காலிக பணிநீக்கம் காலம், பணி காலம் ஆக முறைப்படுத்த படுகிறது..

- இறையன்பு


     💥💦தீபாவளி ரேசிலிருந்து வெளியேறியது மாநாடு


சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகாது; நவ 25ம் தேதி வெளியாகும்


-தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை         💥💦வரும் 23-ல் கொரோனா தடுப்பூசி முகாம்


ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் தடுப்பூசி செலுத்த தயங்குவதால் சனிக்கிழமை முகாமிற்கு ஏற்பாடு - மா.சுப்பிரமணியன்


*50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு - மா.சுப்பிரமணியன்


     👮💥சீனா எல்லைப் பகுதியை நவீன ட்ரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்கும் இந்தியா


     💥💦சதுரகிரி கோவில் பக்தர்களுக்கு அனுமதி.


2 1/2 மாதங்களுக்குப் பின்பு பிரசித்திபெற்ற சதுரகிரி கோவிலுக்கு ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு  அனுமதி.


     🙏💗எம்.எஸ்.தோனி சென்னை வருவார்..


ஐபிஎல் வெற்றியை கொண்டாடும் விதமாக சேப்பாக்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்படும்


சி.எஸ்.கே. நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேட்டி.      👧👦👮ஓசூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் போக்சோவில் கைது


      🙏💥பட்டாசு வெடிப்பதால் எந்த பாதிப்பும் இருக்காது; ஏழைகளுக்கு மோடி செய்தது போல் வேறு யாரும் செய்யவில்லை


- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.


 தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்பதையே பாஜக மத்திய குழு உறுப்பினர்  கல்யாணராமன் கைது காட்டுகிறது; அத்துமீறி நடந்த காவல் அதிகாரிகள் மீது வழக்கு போடப்படும், காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்


-  பாஜக மாநிலத் தலைவர். அண்ணாமலை.


நிருபர் பாஸ்கர் 


😷முக கவசம் உயிர்க்கவசம்😷