கேமராவில் சிக்கிய டி-23 புலி: வனத்துறை நிம்மதி..

 


        ஏழு நாட்களுக்கு பின் தானியங்கி கேமராவில் சிக்கிய டி-23 புலி: வனத்துறை நிம்மதி.*

   

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் நான்கு பேரை தாக்கி கொன்ற டி-23 புலியை கடந்த 25ம் தேதி முதல், மயக்க ஊசிபூசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


மசினகுடியில், ஏழு நாட்களாக புலி நேரடியாகவோ, தானியங்கி கேமராவிலும் தென்படவில்லை.


இதனால், 'புலி எங்கு சென்றது ; என்ன ஆனது' என, தெரியாமல் வனத்துறையினர் கவலையுடன் புலியை தேடி வந்தனர்.


இந்நிலையில், இன்று (அக்., 12) அதிகாலை முதுமலை ஒம்பட்டா பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் புலியின் படம் பதிவாகி இருப்பதால், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.